எழுச்சியுடன் நடைபெற்ற SDPI கட்சியின் தேனி மாவட்ட அரசியல் எழுச்சி மாநாடு
தேனி மாவட்டத்தில் SDPI கட்சியின் சார்பில் மாபெரும் அரசியல் எழுச்சி மாநாடு இன்று (18.05.2013) எழுச்சியுடன் நடைபெற்றது.
முஸ்லிம்களின் இட ஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்திடு, விவசாயிகளின் நலனை காத்திடு, ஜாதி ஏற்றத்தாழ்வுகளை உடைத்தெரிந்திடு, லஞ்ச ஊழலுக்கு எதிராக அணிதிரள்வோம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து இந்த மாநாடு நடைபெற்றது.
பேரணியுடன் துவங்கிய இந்த மாநாடு கர்னல் பென்னி குயிக் பெயர் சூட்டப்பட்ட திடலில் மாபெரும் எழுச்சியுடன் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் SDPI கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி அவர்கள் கலந்து கொண்டார்கள். SDPI கட்சியின் மாநில துணை தலைவர் ரபீக் அஹமது, மாநில செயலாளர்கள் நாஞ்சில் செய்யதலி, ரத்தினம் அண்ணாச்சி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாநில செயற்குழு உறுப்பினர் அஹமது பக்ருதின் மற்றும் தேனி மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இம்மாநாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட மக்கள் கலந்து கொண்டனர்.
അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ
The posts/comments made by the members are not the opinion of the Admins nor do the Admins endorse the opinion of the members.