posted by JOIN SDPI
July 19, 2012
தமிழக மீனவர் அமெரிக்க கடற்படையால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்தும், இந்திய சில்லரை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு வேண்டும் என்று கூறிய ஒபாமாவின் அத்துமீறலை கண்டித்தும் சென்னையில் இன்று (19-07-2012) எஸ்.டி.பி.ஐ கட்சியினர் மாநில செயலாளர் சையது அலி தலைமையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர்கள் ரத்தினம் அண்ணாச்சி, ஜாகிர் உசேன் மற்றும் தென் சென்னை மாவட்ட தலைவர் உசேன், வட சென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா, திருவள்ளூர் மாவட்ட தலைவர் புஹாரி, காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் பிலால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்காவிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பியதுடன், துப்பாக்கிச்சூடு செய்த அமெரிக்க படையினர் கைது செய்யப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தினர். முற்றுகையிட்ட எஸ்.டி.பி.ஐ கட்சியினரை போலிசார் கைது செய்தனர்
അഭിപ്രായങ്ങളൊന്നുമില്ല:
ഒരു അഭിപ്രായം പോസ്റ്റ് ചെയ്യൂ
The posts/comments made by the members are not the opinion of the Admins nor do the Admins endorse the opinion of the members.