Information: Abdul Rahman, India.
Translation: Hisham Hussain, Sri Lanka.
சேரமன் பெருமான் ஜும்மா மஸ்ஜித் - இந்தியாவின் முதலாவது பள்ளிவாசல் (கி.பி. 629 / ஹி. 5)
இந்தியாவின் முதலாவது பள்ளிவாசல் கி.பி. 629 / ஹி. 5 ஆம் வருடம் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்திலேயே கேரள மாநிலம், திரிசூர் மாவட்டம், குடங்கலூர் நகரில் நிருமாணிக்கப்பட்டது. இது உலகிலுள்ள ஆரம்ப பள்ளிவாசல்களில் ஒன்றாகவும் கருதப்படுகின்றது.
மாலிக் பின் தினார் எனும் ஸஹாபி (இதே பெயருடைய அறிஞர் அல்ல) அவர்கள் குடங்கலூர் மன்னன் சேரமன் பெருமானின் வேண்டுகோளுக்கு இனங்க இப் பள்ளிவாசலையும் இன்னும் சில பள்ளிவாசல்களையும் நிருமாணித்தார்.
இஸ்லாத்தை ஏற்றிருந்த மன்னன் சேரமன் பெருமான் மதீனாவுக்குச் சென்று முஹம்மத் நபியவர்களை தரிசித்துவிட்டு திரும்பி வரும் வழியில் இறையடி சேர்ந்ததாகவும், அவரது ஜனாசா ஒமான் நாட்டில் சலாலா எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் தகவல்கள் உண்டு. எவ்வாறாயினும் மன்னனின் இறுதி விருப்பத்தின் பேரில், மாலிக் பின் தினார் அவர்களினால் நிருமாணிக்கப்பட்ட இப்பள்ளிவாசல், சேர அரச வம்சத்தைச் சேர்ந்த மன்னன் ‘சேரமன் பெருமான்’ பெயர்கொண்டே அழைக்கப்படுகின்றது.
கி.பி. 620 அன்மித்த ஒரு நாளில் மன்னன் சேரமன் பெருமான் மகாராணியுடன் மேல்மாடியில் உலா வரும் போது சந்திரன் இரண்டாகப் பிளந்து பின் ஒட்டிக்கொண்டதைக் கண்டான். திகைப்படைந்த மன்னன் வானியல் சாஸ்திர நிபுணர்களை உடன் அழைத்து அந்த அற்புதத்தை உறுதிப்படுத்திக்கொண்டான் என்று வரலாற்றில் பதிவாகியுள்ளது.
அன்றைய கடல்வழி வர்த்தகம் அராபிய (முஸ்லிம்)களினால் மேற்கொள்ளப்பட்டு வந்தது. சிறிய அளவிலான கப்பல்களில் ‘மிளகு’ (கருப்புத் தங்கம்), மாணிக்கம், பருத்தித் துணி, தேக்கு மரம், துணிகளுக்கு வண்ணம் ஏற்றும் சாயம் ஆகியவற்றை இந்தியாவிலிருந்து அராபிய, எகிப்து மற்றும் பண்டைய ஐரோப்பிய துறைமுகங்களுக்கு ஏற்றுமதி செய்து, பகரமாக முத்து மற்றும் தங்கத்தை இந்தியாவுக்கு இறக்குமதி செய்து வந்தனர்.
புகைப்பட விபரம்: மேல் நடு: அரபு-மலையாள எழுத்திலான கல்வெட்டு, இரு புறமும் 400 வருடங்களுக்கு முன் தோற்றம். கீழ் வரி இன்றைய தோற்றம்.)