Search the blog

Custom Search

அன்பார்ந்த சகோதரர்களே...!


இன்றைய இந்தியாவில் முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல், அப்பாவி இளைஞர்கள் கைது என்று துன்பங்கள் தொடர்கதையாகாமல் தடுக்கவேண்டும் என்றால் நமது சமுதாயம் பாராளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும் அதிகமான உறுப்பினர்களை பெற்று இருக்க வேண்டும்.

உப்பு சப்பில்லாத பிரச்சினைக்கெல்லாம் பாராளுமன்றத்தை நடத்தவிடாமல் எதிர்கட்சி செய்கிறது என்றால் அதற்கு உறுப்பினர் வலிமை இருப்பது தான் காரணம்.

நமது ஜனத்தொகை அளவிற்கு மன்றங்களில் உறுப்பினர் பிரதிநித்வம் நம்மிடம் இல்லாதது தான் நமது கோரிக்கைகளை நாம் வென்று எடுக்க முடியாமல் போகிறது.

உறுப்பினர்களை தேர்ந்து எடுக்க , நமது ஜனநாயக முறையில் தேர்தல் மட்டுமே காரணியாக அமைந்துள்ளது.ஒவ்வொரு தொகுதியிலும் சிறுபான்மையாக இருக்கும் நாம் ஒட்டுமொத்தமாக நமது பலத்தை நிரூபித்தால் மட்டுமே வெற்றி பெறமுடியும்.

அடுத்ததாக நாம் தேர்ந்து எடுக்கும் வேட்பாளர் பாராளுமன்றத்தில் நமக்காக குரல் கொடுக்க கூடியவராக, பிரச்சினைகளின் தாக்கத்திற்கு தக்கவாறு ஆணித்தரமாக வாதங்களை முன்னெடுத்து செல்பவராக இருக்க வேண்டும்.

நமது கோரிக்கைகள் அனைத்தையும் மக்கள் மன்றத்தை கூட்டி சொல்லுவதை காட்டிலும்,பாராளு மன்றத்தில் ஒரு கவனஈர்ப்பு தீர்மானம் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவை நம் பக்கம் திரும்பி பார்க்க வைக்க நம்மால் முடியும்.

ஆகவே சகோதரர்களே..! நாம் அனைவரும் ஒரே கொள்கையில் ஒன்றுபட்டு, ஒரே சகோதரர்களாய் தேர்தல் களம் காண முயன்றிடுவோம்,இன்ஷா அல்லாஹ்.


                  posted by :   Rasheed Maricar


READ IN THIS BLOG :
കര്‍ണാടക തിരഞ്ഞെടുപ്പ്‌ : കന്നിയങ്കത്തില്‍ കരുത്തറിയിച്ച് എസ്.ഡി.പി.ഐ

READ IN TWO CIRCLES.NET :
SIO activists detained in Hyderabad for demanding utilization of minority funds

சென்னையில் ஐதராபாத் காவல்துறையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்


சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளை சட்ட விரோதமாக கைது செய்து விசாரணை நடத்திய ஐதராபாத் காவல்துறை அதிகாரிகளை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றிய மாநிலத் துணைத்தலைவர் முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் கூறும்போது, "அனைத்து மக்களுக்கும் சமநீதி" என்ற உயர்ந்த லட்சியத்துடன் இந்திய தேசம் முழுவதும் பல்வேறு சமூக பணிகளை களம் கண்டு வரும் மக்கள் இயக்கமே "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா". ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், நீதி மறுக்கப்பட்டு வரும் முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் இந்திய தேசத்தின் சட்ட விழுமியங்களுக்கு உட்பட்டு ஜனநாயக முறையில் போராடிக் கொண்டிருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது சமீப காலமாக ஊடகத்துறை மூலமாகவும், பொய் பிரச்சாரங்கள் மூலமாகவும் உளவுத்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் விஷமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் ஐதரபாத்தில் காவல்துறை அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தமிழக தலைவரும், இந்நாள் தேசிய செயலாளருமாகிய முஹம்மது அலி ஜின்னா அவர்களை சட்ட விரோதமாக கைது விசாரணை நடத்தியுள்ளனர். இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் உளவுத்துறையின் தூண்டுதலின் அடிப்படையில் முஸ்லிம் விரோத போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இத்தகைய பொய் பிரச்சாரங்களை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்லும். அத்தோடு மட்டுமல்லாமல் சமூக மாற்றத்திற்காகவும், தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கும் எல்லா அமைப்பிற்கும் இது போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டே இருகின்றன. இத்தகைய எதிர்ப்புகளை எல்லாம் கடந்து மக்களுக்கான சமூகப் பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து செயல்பட்டு வரும்" என அவர் தெரிவித்தார்.

இப்போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட தலைவர் மீரான், மாவட்ட செயலாளர் அப்துல்லாஹ், முத்து அஹமது மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

நன்றி

"கர்நாடகாவில் முதல் தேர்தலிலேயே தமது சுய பலத்தை நிரூபித்த எஸ்.டி.பி.ஐ"


"கர்நாடகாவில் முதல் தேர்தலிலேயே தமது சுய பலத்தை நிரூபித்த எஸ்.டி.பி.ஐ"

கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் முதன்முதலாக போட்டியிட்ட சோசியல் டெமக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா -எஸ்.டி.பி.ஐ கட்சி தனது பலத்தை நிரூபித்துள்ளது.

24 தொகுதிகளில் எஸ்.டி.பி.ஐ போட்டியிட்டது. இதில் மொத்தம் 1,00,541 வாக்குகளை அக்கட்சி பெற்றுள்ளது.

எஸ்.டி.பி.ஐப்போல சொந்த பலத்தை நம்பி போட்டியிட்ட வெல்ஃபெயர் பார்டியும் , முஸ்லிம் லீக்கும் போதிய வாக்குகளையோ, செல்வாக்கையோ கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலில் பெற முடியவில்லை.

ஐந்து தொகுதிகளில் போட்டியிட்ட முஸ்லிம் லீக் 1473 வாக்குகளையும், 12 வேட்பாளர்களை களமிறக்கிய வெல்ஃபெயர் பார்டிக்கு 9701 வாக்குகளும் கிடைத்துள்ளன.

இதன் மூலம் எஸ்.டி.பி.ஐ கட்சியை ,இந்திய முஸ்லீம்களின் தேசிய அரசியல் சக்தியாக அரசியல் வல்லுனர்கள் கருதுகின்றனர்.


ഇതും വായിക്കുക :

கட்சியாவது.... கத்தரிக்கையாவது.... உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் : நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீகுர் ரஹ்மான் உறுதி!



கட்சியாவது.... கத்தரிக்கையாவது.... உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் : நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீகுர் ரஹ்மான் உறுதி!



நேற்று முன்தினம் (08/05) நாடாளுமன்றக் கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் "வந்தே மாதரம்" பாடல் ஒலித்தபோது, கூட்டத்திலிருந்து "வெளி நடப்பு" செய்த BSP கட்சியின் ஷபீகுர் ரஹ்மான் எம்பி., அதற்காக "மன்னிப்பு" கேட்க முடியாது என்றார்.


"வந்தே மாதரம்" பாடல் ஒளிபரப்பின் போது, நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தமைக்காக "மன்னிப்பு" கேட்க வேண்டும், என்ற சபாநாயகர் மீரா குமாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்த ஷபீகுர் ரஹ்மானுக்கு, தற்போது கட்சித் தலைமையின் மூலம் நெருக்குதல் தரப்பட்டு வருகிறது.


இறைவனைத்தவிர எவரையும் - எப்பொருளையும் வணங்கக் கூடாது, என்ற கொள்கை உறுதி கொண்ட இஸ்லாமியர்கள் "மண்ணை வணங்க" வலியுறுத்தும் வந்தே மாதரம் பாடலை, ஒரு போதும் பாட முடியாது என்பதுடன், அதுபோன்ற சந்தர்ப்பங்களில் எழுந்து நிற்கவும் முடியாது என்றார், ஷபீகுர் ரஹ்மான்.


தேசிய கீதம் என்பது வேறு, இறைவனுக்கு இணை கற்பிக்கும் வாசகம் கொண்ட "வந்தே மாதரம்" பாடல் வேறு என்றார், அவர்.

செய்தி சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த ஷபீக், இதற்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்த அவர், சபாநாயகர் மட்டுமல்ல கட்சித்தலைமை சொன்னாலும், என் உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் என்றார்.


எனினும், நாடாளுமன்றத்தை அவமதிக்கும் நோக்குடன் தாம் வெளி நடப்பு செய்யவில்லை, எனக்கூறிய அவர், பல ஆண்டுகளாக எம்பி.யாக இருக்கும் தான், "வந்தே மாதரம்" பாடல் நிகழ்ச்சிக்கு, முன் கூட்டியே வெளியில் சென்று விடும் வழக்கத்தை கடைப்பிடித்து வந்த போதும், தவிர்க்க முடியாமல் இப்படி ஆகி விடுகிறது,என்றார். 

கடந்த 1997ம் ஆண்டிலும், நாடாளுமன்றத்தை விட்டு தாம் வெளி நடப்பு செய்ததை சுட்டிக் காட்டிய அவர், பதவிக்காக ஏகத்துவக் கொள்கையில் சமரசம் செய்துக் கொள்ள முடியாது என்றார், ஷபீகுர் ரஹ்மான் பர்க்.

நன்றி 
ஊடகங்கள் சரியான செய்தியை தருகிறதா?-பக்கம்

FUTURE IS OURS.....FUTURE BELONGS TO US...


FUTURE IS OURS........

In our first election we were able to take 101266 votes in Karnataka... (without paying anyone... ).That's no small achievement 



At mysore our candidate stood second surpassing Jds, Bjp 
and at 5 places we stood 3 by surpassing bjp/jds/others..... 
in 9 places we stood 4th..... 

it was the hard work of our cadres that we made so surprising entry in the Karnataka political landscape... I would like to congratulate all of them... winning or losing is secondary,what matters is our effort, and we did it with heart, maybe next time we will be able to turn tables.... 

now! the congress leaders will be available on flex boards only, leaving the whole place for us
 ... fasten ur seat belts lots of work to do in next five years... becz... 

FUTURE BELONGS TO US...                
                              posted by:Ali Usman

READ IN THIS BLOG :
കര്‍ണാടക തിരഞ്ഞെടുപ്പ്‌ : കന്നിയങ്കത്തില്‍ കരുത്തറിയിച്ച് എസ്.ഡി.പി.ഐ

READ IN TWO CIRCLES.NET :
SIO activists detained in Hyderabad for demanding utilization of minority funds

WATCH THIS VIDEO :

SDPI/POPULAR FRONT REVEALING SOME TRUE FACTS ABOUT CPM


link

Related Posts Plugin for WordPress, Blogger...