posted by Sdpi Adirai
சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (எஸ்டிபிஐ) சார்பில் ராமநாதபுரம் மாவட்ட ஜமாத்தார், உலமாக்கள் மற்றும் பொதுக்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி கீழக்கரையில் நடந்தது. மாவட்ட துணைத்தலைவர் பைரோஸ்கான் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி, ராமநாதபுரம் மாவட்ட டவுன் காஜி சலாஹூதீன், கீழக்கரை நகர் தலைவர் செய்யது இஸ்ஹாக், தொகுதி தலைவர் அப்பாஸ் ஆலிம், மாவட்டச் செயலர் செய்யது இபுராகிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாநில பொதுச் செயலர் அப்துல் ஹமீது வரவேற்றார், மாவட்ட செயலாளர் அப்துல்ஜமீல், செயற்குழு உறுப்பினர் அப்துல்வஹாப், மற்றும் முகமது இஸ்ஹாக், கனி, செய்யது ஹாலித், முஜிபுர் ரஹ் மான் உள்பட பலர் பேசினர், நகர் துணைத்தலைவர் அப்துல் ஹாதி நன்றி கூறினார்,
கடல்சார் தொழிலில் ஈடுபட்டு வரும் அட்டப்பா என்ற நல்ல இப்ராஹிம் உள்ளிட்ட ஏராளமானோர் எஸ்டிபிஐயில் இணைந்தனர்
மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி நிருபர்களிடம் கூறியதாவது:
கீழக்கரை நகராட்சியில் குடிநீர் உள்ளிட்ட அடிப் படை வசதிகளை நிறைவேற்றுவதில் முறைகேடுகள் தொடர்ந்து நடைபெறுவதாக தெரிகிறது. முறைகேடுகள் தொடருமானால் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட் டம் விரைவில் நடத்தப்படும்.
திமுக ஆட்சியில் கீழக்கரையை தனி தாலுகாவாக அறிவித்ததை தற்போதைய அரசு பரிசீலனை செய்து உடனடியாக அறிவிக்க வேண்டும். தென் தமிழக வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்ட சேது சமுத்திரத் திட்டப்பணிகளை நிறுத்த தமிழக அரசு மனு செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. நாடாளுமன்றத் தேர்தலில் எஸ்டிபிஐ கட்சி கொள்கைகளை ஆதரிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்து போட்டியிடுவோம். இல்லாவிடில் எஸ்டிபிஐ தனித்துப் போட்டியிடும். இவ் வாறு கூறினார். ஏற்பாடுகளை அஸ்வத்துல் கரீம், அப்பாஸ் ஆலிம் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.
Like this facebook page : http://www.facebook.com/sdpi.adirai