posted by : Bsi Gani
பெண்களை பிரேத பரிசோதனை செய்ய பெண் மருத்துவ குழுவினர் மட்டும் அனுமதிக்கப்பட வேண்டும்.
இதனை முன்னெடுத்த மனித நேய மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு வாழ்த்துக்கள்
பெண்ணின் பிரேதத்தை பெண்ணே பரிசோதனை செய்ய வேண்டும் !
கோரிக்கைக்காக MMMK நடத்திய மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம்!
வாழ்கின்ற காலத்தில் மற்ற ஆண்களின் கண்களுக்கு அஞ்சி வாழும் நம் பெண்களை இறந்த பிறகு போதையில் பிணத்தோடு உறவு கொள்ளும் கயவர்கள் இருக்கும் காலத்தில் அவர்களிடம் விடலாமா? ஆகையால் பெண்ணின் பிரேதத்தை பெண்களே பிரேதப் பரிசோதனை செய்ய வேண்டும் எனும் மதங்களைக் கடந்த ஒரு மனித நேயக் கோரிக்கையை முன் வைத்து மனித நேய மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்பாட்டம் சென்னை சேப்பாக்கத்தில் இன்று காலை நடை பெற்றது !
MMMK வின் மாநிலத் துணைத்தலைவர் சாதிக் தலைமையில் நடந்த இந்த ஆர்பாட்டத்தில் சகோதரர் செங்கிஸ் கான் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார் அப்போது அவர் ' வாழும் காலத்தில் தன் வீட்டுப் பெண்ணை யாரவது தொட்டு விட்டால் அல்லது கை தவறிப் பட்டுவிட்டால் கூட கொந்தளிக்கும் நாம், பட்டால் என்ன பார்த்தால் சண்டைக்கு செல்லும் நாம் , இறந்த பின்னால் நம் சகோதரிகளை அம்மணமாக அறுக்க சம்மதிக்கலாமா? ஒரு கற் சிலை அவமதிக்கப்பட்டால் கொந்தளிக்கிற இந்த சமுகம் கற்புநெறி பேணி வாழ்ந்த, அல்லது கணவன் மட்டுமே பார்த்த உடலை கண்டவனும் காண அனுமதிக்கலாமா? இதை எந்த சமூகமும் ஏற்றுக் கொள்ளுமா? என உணர்சிகரமகப் பேசினார்.
நிறைவுரை ஆற்றிய MMMK வின் மாநிலத் தலைவர் பாளை ரபிக் அவர்கள் பல்லடத்தில் மதுவின் போதையால் பிரேதப் பரிதனைக் கூடத்தில் இருந்தவன் அதைப் புனர்ந்ததோடல்லாமல் மார்பத்தை அறுத்து எறிந்த சம்பவத்தை எடுத்துக் கூறினார். ஆகையால் சட்டத்தை மாற்றுங்கள் பெண்களின் கண்ணியம் என்பது வாழும் போடு மட்டுமல்ல மரணத்திற்கு பின்னும் உள்ளது ஆகையால் பெண்களின் கண்ணியத்தைக் காக்கும் பொருட்டு பெண் முதல்வராகிய நீங்கள் சட்டத்தை மாற்றுங்கள்! அரசு மருத்துவ மணிகளில் பெண்களை ஸ்கேன் செய்யும் பணிகளில் பெண்களை நியமியுங்கள் ! எனக் கோரிக்கை விடுத்தார்.