posted by Sdpi Adirai
SDPI கட்சியின் சார்பில் இலவச குடிநீர் விநியோகம்
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI ) தேசிய அளவில் மக்களுக்காக பல்வேறு நலப்பணிகள் செய்து கொண்டு வருகிறது.
வேலூர் மாவட்டம், வேலூரில் கோடை வெயிலின் தாக்கம் ஒருபுறம் குடிநீர் பற்றாக்குறை. குடி நீருக்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் மிகவும் சிரமப்படுகிறார்கள் .
இதனை கவனத்தில் கொண்ட SDPI கட்சியின் வேலூர் மாவட்ட நிர்வாகிகள் தினமும் இலவச குடிநீர் விநியோகம் செய்ய திட்டமிட்டு முதற்கட்டமாக 17.05.2013 வெள்ளி மாலை 5.30 மணியளவில் R.K.மாதா கோயில், B.T.C.ரோடு சைதாப்பேட்டையில் இலவச குடி நீர் டிராக்டர் மூலம் விநியோகிக்கப்பட்டது .
SDPI கட்சியின் மாவாட்ட தலைவர் S.S.சித்திக் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.மௌலான ஹபிஸ் அஸ்கர் இமாம் அவர்கள் தண்ணிர் விநியோகத்தை துவக்கி வைத்தார். SDPI கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.நாசிர் கான் வரவேற்புரை நிகழ்த்தினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் A.சுலைமான் முன்னிலை வகித்தார். மாவட்ட பொருளாளர் F.பஷீர் அஹமது நன்றி உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள், தொகுதி மற்றும் கிளை நிர்வாகிகள் செயல் வீரர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
150 குடும்பங்கள் பயன்பெறும் வகையில் தண்ணிர் விநியோகம் செய்யப்பட்டது.