Search the blog

Custom Search
தமிழகம் എന്ന ലേബല്‍ ഉള്ള പോസ്റ്റുകള്‍ കാണിക്കുന്നു. എല്ലാ പോസ്റ്റുകളും കാണിക്കൂ
தமிழகம் എന്ന ലേബല്‍ ഉള്ള പോസ്റ്റുകള്‍ കാണിക്കുന്നു. എല്ലാ പോസ്റ്റുകളും കാണിക്കൂ

சென்னையில் ஐதராபாத் காவல்துறையை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய ஆர்ப்பாட்டம்


சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளை சட்ட விரோதமாக கைது செய்து விசாரணை நடத்திய ஐதராபாத் காவல்துறை அதிகாரிகளை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாபெரும் ஆர்பாட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றிய மாநிலத் துணைத்தலைவர் முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் கூறும்போது, "அனைத்து மக்களுக்கும் சமநீதி" என்ற உயர்ந்த லட்சியத்துடன் இந்திய தேசம் முழுவதும் பல்வேறு சமூக பணிகளை களம் கண்டு வரும் மக்கள் இயக்கமே "பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா". ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காகவும், நீதி மறுக்கப்பட்டு வரும் முஸ்லிம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காகவும் இந்திய தேசத்தின் சட்ட விழுமியங்களுக்கு உட்பட்டு ஜனநாயக முறையில் போராடிக் கொண்டிருக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது சமீப காலமாக ஊடகத்துறை மூலமாகவும், பொய் பிரச்சாரங்கள் மூலமாகவும் உளவுத்துறையில் உள்ள சில கருப்பு ஆடுகள் விஷமத்தனமான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு ஆந்திர மாநிலம் ஐதரபாத்தில் காவல்துறை அதிகாரிகள் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முன்னாள் தமிழக தலைவரும், இந்நாள் தேசிய செயலாளருமாகிய முஹம்மது அலி ஜின்னா அவர்களை சட்ட விரோதமாக கைது விசாரணை நடத்தியுள்ளனர். இவ்வாறு காவல்துறை அதிகாரிகள் உளவுத்துறையின் தூண்டுதலின் அடிப்படையில் முஸ்லிம் விரோத போக்கை தொடர்ந்து கடைபிடித்து வருகின்றனர். இது மிகவும் கண்டிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா இத்தகைய பொய் பிரச்சாரங்களை மக்கள் மன்றத்தில் கொண்டு செல்லும். அத்தோடு மட்டுமல்லாமல் சமூக மாற்றத்திற்காகவும், தேசத்தின் முன்னேற்றத்திற்காகவும் போராடிக் கொண்டிருக்கும் எல்லா அமைப்பிற்கும் இது போன்ற நெருக்கடிகள் ஏற்பட்டே இருகின்றன. இத்தகைய எதிர்ப்புகளை எல்லாம் கடந்து மக்களுக்கான சமூகப் பணிகளில் பாப்புலர் ஃப்ரண்ட் தொடர்ந்து செயல்பட்டு வரும்" என அவர் தெரிவித்தார்.

இப்போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட தலைவர் மீரான், மாவட்ட செயலாளர் அப்துல்லாஹ், முத்து அஹமது மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் என 300 க்கும் மேற்பட்டோர் கலந்து தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர்.

நன்றி

கட்சியாவது.... கத்தரிக்கையாவது.... உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் : நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீகுர் ரஹ்மான் உறுதி!



கட்சியாவது.... கத்தரிக்கையாவது.... உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் : நாடாளுமன்ற உறுப்பினர் ஷபீகுர் ரஹ்மான் உறுதி!



நேற்று முன்தினம் (08/05) நாடாளுமன்றக் கூட்டத்தின் நிறைவு நிகழ்ச்சியில் "வந்தே மாதரம்" பாடல் ஒலித்தபோது, கூட்டத்திலிருந்து "வெளி நடப்பு" செய்த BSP கட்சியின் ஷபீகுர் ரஹ்மான் எம்பி., அதற்காக "மன்னிப்பு" கேட்க முடியாது என்றார்.


"வந்தே மாதரம்" பாடல் ஒளிபரப்பின் போது, நாடாளுமன்றத்தை விட்டு வெளிநடப்பு செய்தமைக்காக "மன்னிப்பு" கேட்க வேண்டும், என்ற சபாநாயகர் மீரா குமாரின் அறிவுறுத்தலை ஏற்க மறுத்த ஷபீகுர் ரஹ்மானுக்கு, தற்போது கட்சித் தலைமையின் மூலம் நெருக்குதல் தரப்பட்டு வருகிறது.


இறைவனைத்தவிர எவரையும் - எப்பொருளையும் வணங்கக் கூடாது, என்ற கொள்கை உறுதி கொண்ட இஸ்லாமியர்கள் "மண்ணை வணங்க" வலியுறுத்தும் வந்தே மாதரம் பாடலை, ஒரு போதும் பாட முடியாது என்பதுடன், அதுபோன்ற சந்தர்ப்பங்களில் எழுந்து நிற்கவும் முடியாது என்றார், ஷபீகுர் ரஹ்மான்.


தேசிய கீதம் என்பது வேறு, இறைவனுக்கு இணை கற்பிக்கும் வாசகம் கொண்ட "வந்தே மாதரம்" பாடல் வேறு என்றார், அவர்.

செய்தி சேனல் ஒன்றுக்கு நேற்று பேட்டியளித்த ஷபீக், இதற்காக மன்னிப்பு கேட்கும் பேச்சுக்கே இடமில்லை என தெரிவித்த அவர், சபாநாயகர் மட்டுமல்ல கட்சித்தலைமை சொன்னாலும், என் உயிர் உள்ள வரை "வந்தே மாதரம்" பாட மாட்டேன் என்றார்.


எனினும், நாடாளுமன்றத்தை அவமதிக்கும் நோக்குடன் தாம் வெளி நடப்பு செய்யவில்லை, எனக்கூறிய அவர், பல ஆண்டுகளாக எம்பி.யாக இருக்கும் தான், "வந்தே மாதரம்" பாடல் நிகழ்ச்சிக்கு, முன் கூட்டியே வெளியில் சென்று விடும் வழக்கத்தை கடைப்பிடித்து வந்த போதும், தவிர்க்க முடியாமல் இப்படி ஆகி விடுகிறது,என்றார். 

கடந்த 1997ம் ஆண்டிலும், நாடாளுமன்றத்தை விட்டு தாம் வெளி நடப்பு செய்ததை சுட்டிக் காட்டிய அவர், பதவிக்காக ஏகத்துவக் கொள்கையில் சமரசம் செய்துக் கொள்ள முடியாது என்றார், ஷபீகுர் ரஹ்மான் பர்க்.

நன்றி 
ஊடகங்கள் சரியான செய்தியை தருகிறதா?-பக்கம்

"பாபர் மசூதியின் வரலாற்றை உங்களோடு பகிந்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் இந்த பதிவை எழுதுகிறேன் ..!!


"பாபர் மசூதியின் வரலாற்றை
உங்களோடு பகிந்துகொள்ள வேண்டும்
என்கிற எண்ணத்தில்
இந்த பதிவை எழுதுகிறேன் ..!!

பாபர் மசூதி இருந்த அயோத்தியில்
ராமனின் கோவில் இருந்தது
அதை
1528 இல் பாபர் இடித்துத்தான்
மசூதியை கட்டினார்,
என்பது பார்பன தலைமையிலான
இந்து அமைப்புகளின் வாதம்..!

உடனே பாபர் மசூதியை
இடித்துவிட்டு ,
ராமனுக்கு கோவில் கட்டவேண்டும்
என்று மசூதியை இடித்தனர் ..!!"

"ஆனால்
உண்மையில்
அங்கே ராமனின் கோவில் ஒன்றும் இருக்கவில்லை..
பாபர் அந்த பள்ளிவாசலை கட்டவே இல்லை ..!

பாபருக்கு முனால் டெல்லியை
ஆட்சி செய்தது இப்ராகிம் லோடி,
அந்த ஆட்சியை பிடிக்காத
பார்பன கூடமும்
மற்றும் பல கூடமும்
பாபருக்கு கடிதம் எழுதினார்கள்...

இப்ராகிம் லோடி,
மிகவும் மோசமான மன்னர்,
இந்த நாட்டு மக்களை நீங்கள் தான்
காப்பற்றவேண்டும் என்று ..!!

1526 இல படை எடுத்தார் பாபர்,
பானிபட் என்கிற போர்களத்தில்
யுத்தம் மூண்டது
இப்ராகிம் லோடிக்கும் - பாபருக்கும்
பாபர் இப்ராகிம் லோடியை கொன்று
யுத்தத்தை வென்றார்..

அதற்க்கு முன் 1524 இல்,
இஸ்லாமியர்கள் தொழுவதற்காக
இப்ராகிம் லோடி மசூதியை
கட்டிக்கொண்டு இருந்தார்..

யுத்தத்தில் லோடி கொல்லப்பட்டதால்
அந்த கட்டிடம்
அப்படியே நிறுத்தப்பட்டு இருந்தது ..

1528 இல், வெற்றியடைந்த
பாபரின் தளபதி மிர் பாகி அயோத்தியில்
சுற்றுபயணம் வருகையில்
கட்டபாடாமல் பாதியில் நிறுத்தப்பட்ட
அந்த இடத்தை பார்த்து விட்டு
அங்குள்ள மக்களை விவரம் கேட்கிறார்,

மக்கள், இஸ்லாமியர்கள் தொழுவதற்காக
இப்ராகிம் லோடி மசூதியை
கட்டிக்கொண்டு இருந்தார்..
யுத்தத்தில் லோடி கொல்லப்பட்டதால்
அந்த கட்டிடம் அப்படியே நின்று விட்டது
என்று சொல்லிகார்கள்..

உடனே, தளபதி மீர் பாகி முழுதாக
கட்டி முடிக்க உத்தரவு இடுகிறார்.

அந்த மசூதியை கட்டியும் முடிக்கிறார்
அதற்க்கு தனது மன்னரின் பெயரை சூட்டுகிறார்
"பாபர் மசூதி" என்று ..!!

இது தான் பாபர் மசூதியின் வரலாறு ..
அனால்
இந்த வரலாற்றை படிக்காமல்
அந்த மசூதியை அநியாயமாக
இடித்தனர் பார்பனர் தலைமையான
இந்துக்கள்...!!

உண்மையில்
இஸ்லாமியர்களுக்கும்
பகுத்தரிவாதிகளுக்கும்
இந்த டிசம்பர் 06,
கருப்பு தினம் தான் ...!!"
posted by : Rajesh M Kumar

link

Related Posts Plugin for WordPress, Blogger...